
கோலாலம்பூர் மார்ச் 20-
மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றும் வகையில் மீண்டும் சமுதாய பணிக்கு திரும்பி உள்ள மைபிபிபி கட்சி தற்போது மாநில கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
அந்த வகையில் வரும் மார்ச் 31ஆம் தேதி கூட்டரசு பிரதேச மாநில மைபிபிபி மாநாடு மதியம் 2.00 மணிக்கு Dewan Komunity Sentul மண்டபத்தில் மிகப் பெரிய அளவில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் 800 பேராளர்கள் கலந்து கொள்ளும் நிலையில் மைபிபிபி கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார் என்று விலாயா மாநில மைபிபிபி தலைவர் சத்திய சுதாகரன் தெரிவித்தார்.
மைபிபிபி கட்சியின் உயிர் மட்ட தலைவர்களும் கலந்து கொள்ளும் இந்த மாநாடு அனைவரின் கவனத்தை பெரிதும் எதிர்த்துள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த மாநாடு சீரும் சிறப்புமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் முறையை செய்யப்பட்டு வருவதாக விலாயா மாநில மைபிபிபி மாதாந்திர கூட்டத்திற்கு தலைமை ஏற்ற பின்னர் அவர் இதனை தெரிவித்தார்

