
ம இகா வின் பாரம்பரிய தொகுதியாக உலு சிலாங்கூர் விளங்கியது.
ஆனால் 2018 இல் நடைபெற்ற தேர்தலில் கெஅடிலான் வேட்பாளர் ஜூன் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
இந்த தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் கெஅடிலான் கட்சி தேசிய துணை செயலாளர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இவரை எதிர்த்து
ம இகா தேசிய உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி. மோகன் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நடைபெற மூன்று வாரங்களே இருப்பதால் கெஅடிலான் கட்சி தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

