
பாங்கி, மார்ச் 21- மனித வள அமைச்சின் கீழ் செயல்பட்டுவரும் தேசிய வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கழகத்தின் (நியோஷ்) துணைத் தலைவராக முன்னாள் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மணிவண்ணன் கோவின் நியமிக்கப் பட்டுள்ளார்.
தம் மீது நம்பிக்கைக் கொண்டு தமக்கு இப்பொருப்பினை வழங்கிய பிரதமர் அவர்களுக்குத் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.வளமான வேலை வாய்ப்புகளைக் கொண்ட இத்துறையில் மேலும் பல இந்தியர்கள் ஈடுபட தமது பங்கினை வழங்கவிருப்பதாகவும் திரு. மணிவண்ணன் கூறினார்.
பிரதமர் தலைமையில் சிறந்த மேம்பாட்டினை அடைந்துவரும் தொழில்துறை வளர்ச்சியில் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் முக்கிய அம்சமாக விளங்கும் எனவும் இதன்மூலம் உயிர் இழப்புக்களும் பொருளிழப்புக்களும் தவிர்க்கப்படும் எனவும் வாக்குறுதி வழங்கினார்.
பாங்கியில் அமைந்துள்ள நியோஷ் தலைமையகத்திற்கு முதல் அதிகாரப்பூர்வ வருகையினை மேற்கொண்ட திரு மணிவண்ணன் அவர்களை அந்நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி துவான் ஹஜி அயோப் சால்லே வரவேற்று விளக்கவுரை வழங்கினார்.

