இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பாங்கி வட்டாரத்தில்மின்சுடலை !கோரிக்கை பரசீலிக்கப்படும் – ராயுடு அறிவிப்பு!

பாங்கி, மார்ச் 21-
இந்தியர்கள் அதிகம் வசிக்கும்
பாங்கி வட்டாரத்தில் புதிய மின் சுடலை கட்டும் கோரிக்கை பரசீலிக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.

பாங்கி இந்து மயான பராமரிப்பு சங்கத்தின் தலைவர் மகேந்திரன் முனியாண்டி முன் வைத்திருக்கும் இந்த
மின்சுடலை கோரிக்கை முழுமையாக ஆராயந்து முடிவுகள் எடுக்கப்படும்.

ஒவ்வொரு ஊராட்சி மன்ற மாவட்டங்களிலும் மின்சுடலை அமைக்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பமாக உள்ளது.

ஆகவே பாங்கி வட்டார மக்களின் இந்த கோரிக்கை முழுமையாக ஆராயப்படும்.
மேலும்
அதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றார் அவர்.

பாங்கி வட்டாரத்தில் இந்தியர்களின் உடல்களை அடக்கம் செய்ய நான்கு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலத்தில் புதிய மின் சுடலை கட்டப் வேண்டும் என்று மகேந்திரன் முனியாண்டி முன் வைத்த கோரிக்கையைக்கு பதில் அளித்தபோது சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்று பாங்கி தமிழ்ப் பள்ளிக்கு சிறப்பு வருகை புரிந்த ராயுடுவிடம்
பாங்கி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான திடல் குறித்து கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.

அந்த விவகாரத்திற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காஜாங் கவுன்சிலர் பாலமுரளி, தியாகராஜன், பாங்கி தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர் மதன் ஆறுமுகவேலு, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுகுமாறன், ஆசிரியர் முனியாண்டி, பாங்கி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தலைவர் ஆர்.பன்னீர் செல்வம் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles