
கெராக்கான் கட்சித் தலைவர் டத்தோ டோமினிக் லாவ் இம்முறை பினாங்கில் போட்டியிடுகிறார்.
பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் இம்முறை கெராக்கான் கட்சி இடம் பெற்றுள்ளது.
பினாங்கு மாநிலத்தில் கடந்த 39 ஆண்டுகளாக கெராக்கான் ஆட்சி புரிந்தது.
2008இல் நடைபெற்ற தேர்தலில் லிம் குவான் எங் தலைமையிலான ஜசெக கூட்டணியிடம் தோல்வி கண்டு கெராக்கான் கட்சி ஆட்சியைப் பறிகொடுத்தது.
பல்லின மக்களை கொண்ட கெராக்கான் கட்சி இம்முறை பினாங்கில் ஆதிக்கம் செலுத்த முடிவு செய்துள்ளது.

