
பிரிட்டன் மக்களுக்காக நாள் முழுதும உழைப்பேன் என ரிஷி சுனாக் கூறினார்.
பிரிட்டன் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து இன்று கட்சியின் தலைமை அலுவலகம் வந்த ரிஷி சுனாக்கை நிர்வாகிகள் வரவேற்று வாழ்த்தினர்.
பின்னர் ரிஷி சுனாக் செய்தியாளர்களுஙக்கு அளித்த பேட்டியில்
நான் பிரதமரானது எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் .
நேர்மையுடனும் பணிவுடனும் உங்களுக்கு சேவை செய்வேன்.
நமக்கு இப்போது ஒற்றுமையும் தேவை,
கட்சியையும் நாட்டையும் ஒன்றாகக் கொண்டு வருவதற்கு நான் முன்னுரிமை கொடுப்பேன், அதுதான் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி என்றார்.

