நாடு தழுவிய அளவில் பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது!

கோலாலம்பூர் மார்ச் 25-
இன்று நாடு முழுவதும் பங்குனி உத்திரத் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

நாட்டில் மிகவும் புகழ்பெற்ற பகாங் மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் நேற்றும் இன்றும் பங்குனி உத்திரத் திருவிழாவில் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அலையென திரண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

அதேபோல் கோலாலம்பூர் செந்தூல் தண்டாயுதபாணி கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.பக்தர்கள் பால்குடம் காவடிகள் ஏந்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

பக்தர்களின் வசதிக்காக மாரான் மரத்தாண்டவர் ஆலய நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் முறையே செய்து தந்தது.செந்தூல தண்டாயுதபாணி கோவிலில் காலையில் இரத ஊர்வலத்தில் பக்தர்கள் பெரும் அளவில் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles