பிரபல நடிகை கங்கனா ரணாவத் இமாச்சல் பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் களம் காண்கிறார். இது கங்கனாவின் சொந்த ஊர் என்பதால் எளிதாக ஜெயித்து விடலாம் என பாஜக கணித்துள்ளது.
இவர் தமிழில் ‘தாம் தூம்’ படம் மூலம் அறிமுகமானார். இந்தி திரையுலகில் மட்டுமன்றி, சினிமாவில் பொதுவாக நடக்கும் அரசியலிலும் தலையிட்டு தனது கருத்துகளை கூறி வருகிறார். அவ்வப்போது பொது அரசியலும் பேசுவார்
பிரதமர் மோடியின் தீவிர விசுவாசியான இவர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய விவசாயிகள் டெல்லியில் பெரிய போராட்டம் நடத்தியபோது, அவர்களை ‘பயங்கரவாதிகள்’ என்று கூறி சர்சையில் சிக்கினார்.
மேலும் சமஸ்கிருதத்தை இந்தியாவின் தேசிய மொழி என்றார். இந்தியா என்பது அடிமைகளின் பெயர். அதனை ‘பாரதம்’ என்று மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
இவ்வாறு சர்ச்சை நாயகியாகவே வலம் வந்தார். தற்போது பாஜகவின் அதிகாரபூர்வ எம்.பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
திரையுலகில் கொடி கட்டி பறக்கும் கங்கனா, அரசியலிலும் தனக்கென தனி முத்திரை பதிப்பாரா என்பதை தேர்தல் களம் தான் தீர்மானிக்கப்போகிறது.
ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை வைத்து வெளியான படம் ‘தலைவி’.
ஜெயலலிதாவின் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடித்திருந்தார். அந்த வகையில் அரசியலில் ஜெயலலிதாவின் வழியை பின்பற்றி கங்கனா ரணாவத் வெற்றி பெறுவாரா என்பதே மில்லியல் டாலர் கேள்வியாக இருக்கிறது.