மஇகாவின் தேசியத் தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு!

கோலாலம்பூர் மார்ச் 27-
நாடு தழுவிய அளவில் கிளைத் தலைவர்களின் ஏகோபித்த ஆதரவுடன்
மஇகாவின் தேசியத் தலைவராக டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் போட்டியின்றி ஏகமனதாக இன்று தேர்வு பெற்றார்.

ம இகா தேர்தல் குழுத் தலைவர் கட்சியின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன் பலத்த கரவொலிக்கிடையே இந்த அறிவிப்பை செய்தார்.

2024 – 2027ஆம் ஆண்டுக்கான மஇகாவின் தேசியத் தலைவருக்கான வேட்புமனு தாக்கல் இன்று நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது. கட்சியின் நடப்பு தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மட்டும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை. மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் நிறைவு அடைந்ததும்
மஇகாவின் தேசியத் தலைவராக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மீண்டும் போட்டியின்றி தேர்வு பெற்றார்.

நாடு தழுவிய அளவில் 3,014 கிளைத் தலைவர்கள் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு முழு ஆதரவை வழங்கி அவரைத் தலைவராக தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மஇகாவை வழிநடத்துவார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles