
எழுத்தாளரும் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவருமான சிவகுமார் என்னும் இயற்கை பெயர் கொண்ட சிவாலெனின் மீண்டும் தஞ்சோங் மாலிம் மாவட்ட ஊராட்சி மன்றத்தின் கவுன்சிலராக நியமிக்கபட்டார்.
இன்று காலை தஞ்சோங் மாலிம் ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவி நியமன உறுதி மொழியின் போது சிவாலெனின் ஊராட்சி மன்ற தலைவர் இஃக்ராம் முன்னிலையில் உறுதி மொழி எடுத்து கொண்டார்.
முன்னதாக 2023 – 2024 வரையில் ஊராட்சி மன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த இவர் தனது ஆக்கப்பூர்வமான சேவையால் 2024 முதல் 2026 மார்ச் வரையிலான காலதவணைக்காக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் சிறந்த வரலாற்று கட்டுரையாளாராகவும் எழுத்தாளராகவும் நன்கு தமிழ் வாசகர்,எழுத்தாளர் மத்தியில் அறியப்பட்ட் சிவாலெனின் நல்ல மக்கள் சேவையாளும் தமிழ்ப்பள்ளிகள்,தமிழ்மொழி சார்ந்த பங்களிப்புகளிலும் தனித்துவமான அடையாளத்துடன் தஞ்சோங் மாலிம் மற்றும் சுங்கை வட்டாரங்களில் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரோடு சேர்ந்து ஜசெகவின் திரு.சுப்பிரமணியம்,திரு.மோகன்ரவி,திரு.பிரேம்,கெஅடிலான் கட்சியின் திரு.மாதவன் ஆகியோருடன் ம இ காவின் திரு.சுரேஸ் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்ட இந்திய கவுன்சிலராவர்.