செராண்டாவில் ஆடவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் தொடர்பில் இருவர் கைது! மேலும் நால்வருக்கு வலைவீச்சு

Geng gst 08 Serendah Michael’ என்ற தலைப்பில் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிய காணொளியில் பல ஆடவர்கள் ஒன்று சேர்ந்து ஒருவரை சரமாரியாக தாக்கி காயம் விளைவித்தனர்.

தீபாவளி தினத்தில் நடந்த இந்த பரபரப்பான சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சி அலைய ஏற்படுத்தியது.

இந்திய ஆடவரை கும்பல் ஒன்று கண்மூடித்தனமாக தாக்கி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் காட்டும் இரு காணொளிகள் , சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

‘Geng gst 08 Serendah Michael’ எனும் தலைப்பில் அந்த காணொளிகள் தொடர்பில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட போலீசார் இருவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் Suffian Abdullah தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் நால்வரை போலீசார் தேடி வருகின்றனர் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles