
கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறையில் தள்ளப்பட்டபோது 1999 இல் கெஅடிலான் கட்சியை வழிநடத்திய திறமை இவருக்கு இருக்கிறது.
1999 பெர்மாத்தாவ் பாவ் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 காஜாங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2018 இல் பண்டான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் துணை பிரதமராக பதவி ஏற்றார்.
நம்பிக்கை துரோகிகளை வீழ்த்தும் தருணம் வந்துவிட்டதால் இம்முறை பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற தொகுதியில் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா போட்டியிடுகிறார்.

