
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியை கவிழ்த்த நம்பிக்கை துரோகிகளின் கைவசம் உள்ள தொகுதிகளை கைப்பற்ற கெஅடிலான் கட்சி வியூகம் வகுத்துள்ளது.
அந்த வகையில் கடந்த மூன்று பொதுத் தேர்தலில் கெஅடிலான் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸூரைடா கமாரூடின் கைவசம் உள்ள அம்பாங் நாடாளுமன்றத்தை வெல்லும் வகையில் நூருல் இஸாவை கெஅடிலான் கட்சி களம் இறங்குகிறது.
இதற்கு முன்னர் அம்னோ ஜாம்பவான்களை வீழ்த்தி சாதனை படைத்த நூருல் இஸாவின் வருகையால் அம்பாங் நாடாளுமன்றம் அதிர போகிறது.
அம்பாங் தொகுதியில் நூருல் இஸா போட்டியிடுவதால் அம்பாங் பக்கத்தான் ஹரப்பான் ஆதரவாளர்கள் பெரும் உற்சாகத்துடன் உள்ளனர்.

