
தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஐ.பி.எப். உலு லாங்காட் இளைஞர், மகளிர் பிரிவு ஏற்பாட்டில் 300 குடும்பங்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
செமினி வட்டாரத்தில் உள்ள ரிஞ்சிங் தோட்டம், டுனெடிங் தோட்டம், தாமான் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், தாமான் ஸ்ரீ செமினி மற்றும் செமினி சுற்று வட்டாரத்திலுள்ள இதர பகுதிகளை சேர்ந்த மக்களுக்கும் பொருட்கள் வழங்கப்பட்டன.

செமினி முன்னாள் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், டத்தோ ஜோஹான் அப்துல் அஜிஸ், ஐ.பி.எப். தலைமைச் செயலாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐ.பி.எப். தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் கணேஷ்குமார் சம்பந்தன், தேசிய மகளிர் பிரிவுத் தலைவி ராஜம்மாள் பெருமாள் ஆகியோர் இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்

