செராஸ் கொக்ரேய்ன் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய திருப்பணிக்கு நிதி உதவி வழங்குங்கள்!

கோலாலம்பூர் மார்ச் 28-
செராஸ் கொக்ரேய்ன் ஜாலான் நக்கோடா யூசோப் 1 ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வரும் மே மாதம் 13 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது என்று ஆலயத் தலைவர் எம். அருள் ஆனந்தன் தெரிவித்தார்.

எச்ஆர்டி திட்டத்தினால் முன்பு கொக்ரோய்ன் பள்ளி அருகில் இருந்த இந்த கோவில் இப்போது ஜாலான் நக்கோடா யூசோப் 1 என்ற இடத்திற்கு மாற்றப் பட்டுள்ளது.

இந்த ஆலயத்தின் அருகில் PPR Perkasa குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது.

பல லட்சம் வெள்ளியில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் கட்டுமான பணிகள் பூர்த்தி அடையும் வகையில் உள்ளது. ஆலயத் திருப்பணிக்கு இன்னும் ஒரு லட்சம் வெள்ளி தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த ஆலயம் மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. இந்த வட்டாரத்தில் ஒரு தாய்க்கோவிலாக இது விளங்கும் என்று அவர் சொன்னார்.

டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் அவரின் செயலாளர் மாண்புமிகு சுரேஷ் சிங் ஆகியோர் மகா கும்பாபிஷேகத்திற்கு தலைமையேற்கும்படி அழைப்பு விடுக்கப்படும் என்றார்மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற பொதுமக்கள் நன்கொடை வழங்கி பேருதவி புரியும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

நன்கொடை வழங்க விரும்புவோர்
RHB Bank
21419200045199
கோவில் வங்கி கணக்கில் நிதியை போடலாம்.

மேல் விபரங்கள் தெரிய விரும்புவோர்
011-36639665

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles