ஏ.டி.எம். கார்டு மோசடிக் கும்பல் முறியடிப்பு-இரு அதிகாரிகள் உள்பட 16 பேர் கைது

மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும்
நோக்கில் ஏ.டி.எம். எனப்படும் தானியங்கி பணப்பட்டுவாடா கார்டுகளை
விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை
வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

கடந்த வாரம் கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் கோம்பாக் வட்டாரத்தில்
மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை நடவடிக்கைகளில் இரு வங்கி
அதிகாரிகள் உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து
இக்கும்பலின் மோசடி நடவடிக்கை அம்பலத்திற்கு வந்தது.

கைது செய்யப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட மூன்று
பெண்கள் உள்ளிட்ட 15 மலேசியர்கள் மற்றும் ஒரு நைஜீரிய பெண்
ஆகியோரும் அடங்குவர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர்
டத்தோ ஹூசேன் ஓமார் கான் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles