
பேங்க் நெகாரா நிர்வாகி கோகிலாவை ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் நீக்கியது தவறு என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
நியாயமற்ற வகையில் கோகிலா வேலியில் இருந்து நீக்கப்பட்டதால் அவர் அதிக இழப்பை எதிர்நோக்கி இருக்கிறார்.
அவருக்கு வழங்க வேண்டிய இழப்பீடு மற்றும் செலவுத் தொகையை உயர்நீதிமன்றம் பின்னர் தெரிவிக்கும் என்று நீதிபதி Ahmad Bache தீர்ப்பளித்தார்.
கோகிலா அரசியலில் ஈடுபட்டிருந்தார் என்று கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தாமல் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டது நியாயமற்றது என்று நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

