
‘துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள வாக்கு மாறமாட்டேன்” என சினிமா வசனம் பேசி விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வாக்கு சேகரித்தார்.
”கேப்டன் இறந்து 100 நாள் ஆகவில்லை. அதற்குள் வாழ்க்கையில் பெரும் பயணத்தைத் தொடங்கிவிட்டேன். இந்த பயணம் வெற்றிப் பயணமாக இருக்க வேண்டும். கேப்டனை கருப்பு எம்.ஜி.ஆர். என அழைப்பது ஏன் என இப்போதுதான் புரிகிறது.
வெற்றி பெற்றதும் உங்களை குறைகளைப் போக்க சிங்கம்போல் நாடாளுமன்றத்தில் கர்ஜிப்பேன்.
டெல்லியில் சிவகாசி பட்டாசு சத்தம் ஒலிக்க வேண்டும். பட்டாசுத் தொழிலாளர்களுக்கான தேவைகளை பூர்த்திசெய்வேன். துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள வாக்கு மாற மாட்டேன்” என்று கூறினார்.

