
சிலாங்கூர் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் ஆயுதமேந்தி கொள்ளையிட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் ஐந்து குற்றவாளிகளை போலீஸார் நேற்றிரவு சுட்டுக் கொன்றனர்.
சுமார் 11.30 மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தை சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் பெர்னாமாவிடம் உறுதிப் படுத்தினார்.
அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்ட போலீஸ் குழு ஒன்று சந்தேகத்திற்குரிய வாகனத்தை சோதனைக்காக நிறுத்த முயன்ற போது இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
போலீசாரிடமிருந்து தப்பியோட முயன்ற சந்தேகப் பேர்வழிகள் போலீசாரை நோக்கி பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் போலீஸ் வாகனத்தின் பின்புறம் மோதியுள்ளனர்.

