லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் போட்டியில்இறுதி ஆட்டத்திற்குதேர்வு பெற்று வரலாறு படைத்தார் சிவசங்கரி!

லண்டன் நகரில் நடைபெற்று வரும் ஸ்குவாஷ் கிளாசிக்ஸ் போட்டியில் மலேசிய வீராங்கனை சிவசங்கரி இறுதிப்போட்டிக்கு காலடி எடுத்து வைத்து வரலாறு படைத்தார்.

நேற்று இரவு நடந்த பரபரப்பான அரை இறுதி ஆட்டத்தில் உலகின் நான்காம் தர வீராங்கனையான பெல்ஜியத்தின் Nele Gillis என்பவரை 10-12,11-7,11-8,10-12,11-9 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நள்ளிரவு நடக்கும் இறுதி போட்டியில் எகிப்து நாட்டைச் சேர்ந்த உலகின் இரண்டாம் தர வீராங்கனை Hania El Hammamy என்பவரை சந்திக்கிறார்.

ஒரு லட்சத்து 8,000 டாலர் பரிசுத்தொகை கொண்ட இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று சிவசங்கரி புதிய வரலாறு படைப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles