லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் போட்டியில்சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்தார் சிவசங்கரி!

முத்தமிழ் மன்னன்

லண்டன், ஏப்ரல் 2-
லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் போட்டியில் மலேசிய இளம் வீராங்கனை சிவசங்கரி சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

மலேசிய நேரப்படி இன்று அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில்
எகிப்து நாட்டைச் சேர்ந்த உலகின் இரண்டாம் தர வீராங்கனை Hania El Hammamy என்பவருடன் சிவசங்கரி மோதினார்.

இந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் சிவசங்கரி 11-9, 5-11,13-11, 12-14,11-8 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார்.

மொத்தம் ஐந்து சுற்றுக்கள் வரை நீடித்த இந்த போட்டியில் அவர் மூன்று சுற்றுகளை தன்வசம் படுத்தினார்

இந்த போட்டியில் வெற்றி பெற்றது மூலம் மூன்று உலக வீராங்கனைகளை வீழ்த்திய பெருமை இவரை சாரும்.

லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் போட்டியில் சாதனை படைத்த சிவசங்கரிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles