
இந்து சமயத்தை தொடர்ந்து இழிவு படுத்தி கேவலமாக பேசிக் கொண்டிருக்கும் ஸம்ரி வினோத் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி இன்று மாலையில் புத்ரா ஜெயாவில் உள்ள அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் பல இயக்கங்கள் ஒன்று சேர்ந்து மகஜரை வழங்கின.
இந்த சம்ரி வினோத் பல ஆண்டுகளாகவே இந்து சமயத்தை இழிவு படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் மீது சட்டம் பாய வேண்டும் என பொது அமைப்புகள் கேட்டு கொண்டுள்ளன.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், வழக்கறிஞர் சித்தி காசிம் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

