அரசு ஊழியர்கள் நோன்புப் பெருநாள் சிறப்பு உதவித் தொகையாக வெ.500 பெறுவார்கள்!பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவிப்பு

புத்ரா ஜெயா ஏப்ரல் 1-
ஒப்பந்தப் பணியாளர்கள் உட்பட கிரேட் 56 மற்றும் அதற்குக் கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாள் சிறப்பு உ தலதவி நிதிமாக 500 வெள்ளியை வழங்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த தொகை வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படும்.

ஓய்வூதியம் பெறக்கூடிய மற்றும் ஓய்வூதியம் பெறாத படைவீரர்கள் உட்பட அரசு ஓய்வு பெற்றவர்களுக்கு 250 வெள்ளி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் இந்த நோன்புப் பெருநாள் சிறப்பு உதவி நிதியை விநியோகிக்கும்படி கருவூலத்திற்குத் தெரிவித்துள்ளேன் என்று இன்று இங்கு நடைபெற்ற பிரதமர் துறையின் மாதாந்திர ஒன்றுகூடும் நிகழ்வில்
உரையாற்றும் போது அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles