
இந்தியாவின் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் மாநாடு வரும் ஏப்ரல் 14,15 ஆம் தேதிகளில் ஷா ஆலம் ஐடிசிசி மாநாட்டு மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் உலக அளவில் 300 க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று மலேசிய டாக்டர் அம்பேத்கர் நற்பணி இயக்கத்தின் தலைவர் டத்தோ பஞ்சமூர்த்தி தெரிவித்தார்.
ஏப்ரல் 14 ஆம் தேதி மாலை 3.00 மணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார் என்றார் அவர்.
ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, சட்டத் துறை துணை அமைச்சர் குலசேகரன் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.
டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோவும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் செந்தமிழ் செல்வர் ஓம்ஸ் பா தியாகராஜன், துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
News – Manan

