
லண்டன் கிளாசிக் போட்டியில் உலகின் நம்பர் 2 வீராங்கனையான எகிப்தைச் சேர்ந்த ஹனியா எல் ஹம்மாமியைத் தோற்கடித்து வெற்றிகரமாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ் சிவசங்கரிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
2015 இல் டத்தோ நிக்கோல் டேவிட் லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் போட்டி இறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெற்றார் .
அதன் பின்னர் இந்த போட்டியில் இறுதிப் போட்டிக்கு வந்த முதல் மலேசிய வீராங்கனை சிவசங்கரி ஆவார்.
கடும் போராட்டத்தில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்த சிவசங்கரிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் சொன்னார்.

