

கோலாலம்பூர் ஏப்ரல் 2-
லண்டன் நகரில் நடைபெற்ற ஸ்குவாஷ் கிளாசிக் போட்டியில் மலேசிய இளம் வீராங்கனை சிவசங்கரி சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்திருப்பது பாராட்டுக்குரியது என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ. சிவகுமார் தெரிவித்தார்.
இந்த போட்டியில் அவர் மூன்று உலக வீராங்கனைகளை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வெல்ல கடுமையான போராட்டத்தை நடத்தி இருக்கிறார்.
இதற்கு முன்னர் பல அனைத்துலக போட்டிகளில் வெற்றி பெற்ற இவர் இப்போது லண்டன் ஸ்குவாஷ் கிளாசிக் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனையாக உள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலும் சிவசங்கரி சாதனை படைக்க மனதார வாழ்த்துகிறேன் என்று மனிதவள முன்னாள் அமைச்சருமான அவர் சொன்னார்.

