
செய்தி: காளிதாஸ் சுப்ரமணியம்
படம்: மா. பவளச்செல்வன்
தேசிய முன்னணி செயலாளர் மற்றும் உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காடீரின் நோன்பு திறப்பு விழா நேற்று மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த நோன்பு திறப்பு விழாவில் மக்கள் சக்தி கட்சி தலைவர் டத்தோஸ்ரீ ஆர் எஸ்.தனேந்திரன், உதவித் தலைவர் குகனேஸ்வரன், செயலாளர் கணேஷ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
வசதி குறைந்த மக்களுக்கும் இந்த நிகழ்வில் உதவிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ம.இ.கா. தேசிய தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன், செயலாளர் டத்தோ ராஜசேகரன், மக்கள் சக்தி கட்சி தேசிய தலைவர் டத்தோஶ்ரீ ஆர். எஸ். தனேந்திரன், கிம்மா தேசிய தலைவர் டத்தோஶ்ரீ சேட் இப்ராஹிம் காடிர், மலேசிய இந்திய ஐக்கிய கட்சி தலைவர் டான்ஶ்ரீ நல்லகருப்பன் உட்பட தேசிய முன்னணி உறுப்பு காட்சிகளை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்

