
கோலாலம்பூர் ஏப்ரல் 2-
செந்தூல் கம்போங் ரயில்வே ஸ்ரீ நாகம்மா ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட மாற்று நிலத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் மீட்டு தர வேண்டும் என்று ஆலயத் தலைவர் ஹரிஹரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகம்மா ஆலயத்திற்கு செந்தூல் காளியம்மன் ஆலய வரிசையில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாகம்மா ஆலயத்திற்கு 5,000 சதுர அடி நிலமும் துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு 5,000 சதுர அடி நிலமும் வழங்கப்பட்டது.
ஆனால், துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகம் நாகம்மா ஆலயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் பாதி நிலத்தை எடுத்துக் கொண்டு ஆலயத்தை கட்டியுள்ளது.
இதனால் நாகம்மா ஆலயத்தை இங்கு கட்ட முடியவில்லை. கோலாலம்பூர் மாநகர் மன்றம் இதில் தலையீட்டு எங்கள் நிலத்தை மீட்டு தர வேண்டும்
இல்லையெனில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் புதிய நிலத்தை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
News – Manan

