முன்பைவிட இப்போதுஅத்தியாவசிய பொருட்கள் விலை குறைவாக உள்ளது!பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கூறுகிறார்

(செ வே. முத்தமிழ் மன்னன்)

புத்ரா ஜெயா, ஏப்ரல் 2-
முன்பை விட இப்போது நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைவாக உள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.

முந்தைய அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் கோழி, முட்டை மற்றும்
சமையல் எண்ணெய் விலை இப்போது குறைவாக உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் ஒரு கிலோ கோழி 13 வெள்ளிக்கு விற்கப்பட்டது. இப்போது அதன் விலை குறைவாக உள்ளது.

ஐந்து கிலோ சமையல் எண்ணெய் விலை 45 வெள்ளிக்கு விற்கப்பட்டது. இதை எதிர்கட்சி காரர்களுக்கு நினைவு இருக்கின்றதா?

இப்போது ஐந்து கிலோ சமையல் எண்ணெய் விலை 27 வெள்ளி மட்டுமே.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் முட்டைகள் கிடைக்கவில்லை.

இப்போது இந்த ஆட்சியில் முட்டைகள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்று பிரதமர் துறை அமைச்சரின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றும் போது பிரதமர் இதனை சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles