
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர், ஏப் 3-
நோன்புப் பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும்
பயணிப்பதற்காக செலாத்தான் ஒருங்கிணைந்த பஸ் முனையத்திற்கு
(டி.பி.எஸ்.) ஒதுக்கீடு செய்யப்பட்ட 330,000 விரைவு பேருந்து
டிக்கெட்டுகளில் 220,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
இதில் கிழக்குக் கரை மாநிலங்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்து விற்று தீர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வடக்கு மற்றும் தெற்கு தடங்களுக்கான கிட்டத்தட்ட 100,000 பஸ்
டிக்கெட்டுகள் மட்டுமே எஞ்சியிருப்பதாகப் போக்குவரத்து அமைச்சர்
அந்தோணி லோக் கூறினார்.

