
பேராக் மாநிலத்தில் தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் என்னை வெளி ஆள் என்று அம்னோ முத்திரை குந்தி வருவதை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வன்மையாக கண்டித்தார்.
கோலகங்சார் மலாய் கல்லூரியில் ஏழு ஆண்டுகள் படித்தேன்.
பின்னர் தைப்பிங் கமூண்டிங் சிறையில் இரண்டு ஆண்டுகள் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டேன்.
ஆக மொத்தம் ஒன்பது ஆண்டுகள் நான் பேராவில் இருந்திருக்கிறேன். நான் ஒன்றும் வெளி நபர் அல்ல என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதிலடி கொடுத்திருக்கிறார்.
இம்முறை தம்பூனில் போட்டியிடும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் சம்சூல் அனுவார் கூறியிருப்பதற்கு பதிலடி தரும் வகையில் டத்தோஸ்ரீ அன்வார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

