
தனது சுயசரிதை புத்தகம் எழுதியது தொடர்பில் முன்னாள் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ தோமி தோமஸ் மீது விசாரணை நடத்தப்படுகிறது.
ஆனால் முன்னாள் அட்டெர்னி ஜெனரலாக இருந்த அப்பெண்டி அலி முது புகார்கள் எழுந்தன.
அவர் மீது ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று கேள்வியை எழுப்பியுள்ளார்.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சொந்தமான 4 கோடியே 20 லட்சம் வெள்ளி மோசடி தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு இப்போது காஜாங் சிறையில் இருக்கிறார்.
நஜிப் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை விடுவித்தார்.
மேலும் 1 எம்டிபி ஊழலையும் மூடி மறைக்க அப்பெண்டி அலி முயன்றார். அவர் மீது ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என்று அவர் கேட்டார்

