

பிறை, ஏப்ரல் 3- புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு பினாங்கு பிறை சட்டமன்ற தொகுதியில் நோன்பு திறப்பு விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் பிறை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கவுன்சிலர் பொன்னுத்துரை, Haji Suhairi (Timbalan Pengerusi Masjid Jamek Perai) , En Ilyas Md Desa (Penghulu Kawasan Perai) உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ சங்கர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
– செ வே. முத்தமிழ் மன்னன்

