
ஜோகூர் பாரு, ஏப்ரல் 3-
பக்காத்தான் ஹராப்பான் இந்திய தலைவர்களிடையே நடக்கும் உட்பூசல் போராட்டம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள சூழ்நிலையில் இந்தி மேம்பாட்டு திட்டமான மித்ராவை தற்காலிகமாக பிரதமர் பார்வையில் வைக்கப்பட வேண்டும் என ஜொகூர் சந்திர சேகரன் ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மித்ரா எனப்படும் இந்திய உருமாற்று திட்டமான அந்த நிறுவனத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை இந்திய சமுதாயத்திற்கு ஏற்பட்டுவிட்டது.
இந்திய உருமாற்று திட்டத்தில் நடக்கும் போட்டா போட்டியில் மித்ரா செயல் இழந்து நிற்கின்ற சூழ்நிலையில், இந்தியர்களின் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட அந்த நிறுவனம் முடங்கி போக வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக திரு சந்திர சேகரன் ஆறுமுகம் கோடுகாட்டியுள்ளார்.
இந்திய சமுதாயத்தின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள் என நம்பிய மக்களுக்கு கிடைத்த ஏமாற்றத்தை சரி செய்ய பிரதமர் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டதாக தாம் கருதுவதாக சமூக சிந்தனையாளருமான திரு சந்திர சேகரன் ஆறுமுகம் கருத்து தெரிவித்துள்ளார்.
- செ வே. முத்தமிழ் மன்னன்