மலேசிய – இந்தோனேசியா, இரு நாடுகள் உறவுகள் தொடர்பில் அன்வார்-பிராபோவோ பேச்சுவார்த்தை!

கோலாலம்பூர், ஏப் 4 – இந்தோனேசிய அதிபரும் தற்காப்பு அமைச்சருமான
பிராபோவோ சுபியாந்தோவுடன் இன்று நடத்தப்பட்ட சந்திப்பில்
மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான உறவை மேலும்
வலுப்படுத்துவதற்கான அடுத்தக் கட்ட இலக்குகள் குறித்து
விவாதிக்கப்பட்டதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

புத்ராஜெயாவிலுள்ள தமது அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்
போது தங்களின் பணி தொடர்பான அனுபவங்கள் மற்றும் கருத்துகளைப்
பரிமாறிக் கொண்டதாக அவர் சொன்னார்.

எங்களின் இருவரின் அரசியல் பயணம் ஏறக்குறைய ஒரே
மாதிரியானதுதான்.

பதவி ஏற்பதற்கு முன்னர் பல்வேறு சவால்களை
நாங்கள் எதிர்கொண்டோம் என்று அவர் சொன்னார்.

-பெர்னாமா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles