
கோலாலம்பூர் ஏப்ரல் 4-
மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு
(மித்ரா) மீண்டும் பிரதமரின் துறையின் கீழ் திரும்பப் பெறப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, இந்திய சமூக அமைச்சரவைக் குழு அல்லது தேசிய குழு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
இந்திய சமூகத்தில் தீர்க்கப்படாத பிரச்சனைகளை நிவர்த்தி செய்வது குறித்து இது ஆராயும் என டெனிசன் ஜெயசூரியா கூறினார்.
2009 இல் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இந்திய சமூகத்திற்கான அமைச்சரவைக் குழுவைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், “இது மிகவும் அவசியமானது மற்றும் அவசரமானது” என்றார்.
– மலேசிய கினி

