
கோலாலம்பூர் ஏப்ரல் 4-
மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (மித்ரா) தொடர்பான அரசாங்கத்தின் வெளிப்படையான அலட்சியப் போக்கை கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ இன்று விமர்சித்தார்.
அது மித்ராவை “வளர்ப்புப் பிள்ளை” போல நடத்துவதாகக் கூறினார்.
2018 முதல் மித்ராவை பிரதமர் துறையிலிருந்து (பிஎம்டி) தேசிய ஒற்றுமை துறை அமைச்சகத்திற்கு தொடர்ந்து மாற்றுவது சோர்வாகவும், மலேசிய இந்திய சமூகத்தை அவமதிப்பதாகவும் கூறினார்.
மித்ரா வளர்ப்புப் பிள்ளை போல் நடத்தப்படுகிறது. யாரும் அதை சொந்தமாக்க விரும்பவில்லை.
முன்னும் பின்னுமாக மாற்றுவதால் நிறைய பேர் அதன்மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள்.
இது இந்திய சமூகத்தில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையின்மைக்கு வழிவகுக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
செ.வே. முத்தமிழ் மன்னன்

