இந்தியர்களின் மேம்பாட்டிற்கு நீண்டகால திட்டமும் அமைச்சும் அமைக்க கோரிக்கை!

(காளிதாஸ் சுப்ரமணியம்)

நாட்டில் இந்தியர்கள் பிற இனத்தவர்களுடன் இணையான வளர்ச்சியடைவதற்கு அதற்கென புதிய நீண்டகால திட்டவரைவு வகுக்கப்பட வேண்டும். 

அதேவேளையில் அதனை செயல்படுத்த்தவும் வழிநடத்தவும் தனி அமைச்சும் அமைக்கப்பட வேண்டும் என மலேசிய தமிழர்  தன்மான சிந்தனை இயக்கம் கோரிக்கை முன் வைத்துள்ளது.

இத்தகைய திட்டங்கள் செயல்படுத்துகின்ற அமைச்சரவின் கீழ் சிறப்புக் குழு அமைக்க வேண்டும். அதே வேளையில் வேளையில் பிரதமர் இலாகாவிலிருந்தும் மேலும் முக்கிய தரப்பினர்களும் அதில் இடம் பெற வேண்டும்.

ஆண்டுக்கு ஒரு முறையாவது  செயல்படுத்திய திட்டங்கள் குறித்து  விளக்கக் கூட்டம் நடத்த வேண்டும்.

அன்மையில் நாட்டில் மித்ரா பெறும் வாதத்திற்குள்ளானது அனைவரும் அறிந்ததே. அனால் மித்ராவை காட்டிலும் மலேசிய இந்தியர்களின் பிரச்சினைகள் பேசப்படவும் தீர்க்கப்டவும் அதிகமான இருக்கின்றது.

ஆகவே பிரதமர் தங்களது கோரிக்கை குறித்து செவிசாய்க்க வேண்டும் என்று இயக்கத்தின் துணைத் தலைவர் மாசிலாமணி கேட்டுக் கொண்டார்.

இயக்கம் முன்வைத்துள்ள கோரிக்கை குறித்து எதிர்வரும் 27 ஏப்ரல் 2024 டான்ஶ்ரீ கே.ஆர்.சோமா அரங்கில் 150 பொது இயக்கங்கள் சேர்ந்து நிகழ்ச்சி ஒன்று நடத்தப் போகிறோம் என மாசிலாமணி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து தங்களது கோரிக்கைகளை விவரிக்கவுள்ளதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles