
(காளிதாஸ் சுப்ரமணியம்)
(மா.பவளச்செல்வன்)
உலுசிலாங்கூரில் மருத்துவ சேவையை வழங்கி வரும் எஸ்.பி.கேர். குழுமத்தின் நோன்பு திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
எஸ்.பி.கேர். குழும பணியாளர்களுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் அனைவரும் தங்களது குடும்பங்களுடன் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எஸ்.பி.கேர். குழுமத்தின் தோற்றுனர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் ஹரி ராயா அன்பளிப்புகள் வழங்கினார்.
மேலும் இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு அவ்வட்டார ஆசிரம குழந்தைகளை டாக்டர் சத்திய பிரகாஷ் சிறப்பு வரவேற்பளித்து உபசரித்து அன்பளிப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

நிகழசியில் எஸ்.பி.கேர். குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் ஹெர்ரி தினேஷ், தலைமை நடவடிக்கை அதிகாரி டாக்டர் ஈஸ்வர், உட்பட மருத்துவர்களும் குழுமத்தின் மேல்மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

