
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 5-
இந்திய சமுதாயத்திற்கு மித்ரா மூலம் வெறும் 100 மில்லியன் அதாவது 10 கோடி வெள்ளி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த 10 கோடி வெள்ளி இந்திய சமுதாயத்தை கரை சேர்க்குமா என்று பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் மற்றும் உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி கேள்வியை எழுப்பினார்.
இந்த 10 கோடி வெள்ளி முழுமையாக இந்திய சமுதாயத்துக்கு சேரப்போவதில்லை. சில குறிப்பிட்ட நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது.
உண்மையிலேயே இரண்டு பில்லியன் அதாவது 200 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டால் மட்டுமே இந்திய சமூகம் பயன் அடையும் என்று அவர் சொன்னார். மித்ரா நிதி பிரதமர் துறை அல்லது ஒற்றுமை துறை அமைச்சின் கீழ் இருப்பது முக்கியமல்ல.
இந்த நிதி முழுமையாக இந்திய சமுதாயத்திற்கு கிடைக்கிறதா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி என்று அவர் சொன்னார்.