
செ.வே. முத்தமிழ் மன்னன்
பந்திங், ஏப்ரல் 6-
ஹரிராயா பெருநாளை கொண்டாடவிருக்கும் B40 பிரிவைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் HRDcorp நிறுவனத்தின் மூலம் கோலலங்காட் நாடாளுமன்ற தொகுதியில் உணவு கூடைகள் வழங்கப்பட்டது.
கோலலங்காட் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ,கவுன்சிலர்கள் மற்றும் கிராமத் தலைவர்களுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் பலனாக இந்த உணவுக் கூடைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பெருநாளை கொண்டாடும் முஸ்லிம் சகோதர சகோதரிகளின் சுமையை குறைக்க இது உதவும் என்று நம்புகிறோம் என்று அவர் சொன்னார்.

