
இவ்வாண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி முதல் நேற்று வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஓப் பந்தாவ் 2024 நடவடிக்கையின் வாயிலாக 558,956 வெள்ளி மதிப்புள்ள பல்வேறு பொருள்களை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு பறிமுதல் செய்துள்ளது.
ரமலான் சந்தைகள், நோன்புப் பெருநாள் சந்தைகள், பொதுச் சந்தைகள், மார்க்கெட்டுகள், பல்பொருள் அங்காடிகள், சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் இணைய விற்பனை உள்ளிட்ட 38,126 வளாகங்களை சோதனை செய்ததன் விளைவாக இப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமது அலி தெரிவித்தார்.
bernama

