கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியை கைப்பற்றலாம் என்று கனவு காண வேண்டாம்!டாக்டர் சத்திய பிரகாஷ் பதிலடி

(காளிதாஸ் சுப்ரமணியம்)
(மா.பவளச்செல்வன்)


கோலகுபு பாரு ஏப்ரல் 6-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தொகுதியை கைப்பற்றி விடலாம் என்று பெரிக்கத்தான் நேஷனல் கனவு காண்கிறது.

நீங்கள் கனவு காணுங்கள். அதில் தவறில்லை. ஆனால் உங்கள் பகல் கனவு பலிக்காது என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி கெஅடிலான் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் தெரிவித்தார்.

பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கு சில இந்தியர்கள் ஆதரவு தெரிவிக்க முன் வரலாம்.

அது அவர்களின் உரிமை. பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் யார் போட்டியிட்டாலும் நாங்கள் வரவேற்கிறோம்.

நடப்பு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹோங் கடந்த மூன்று தவணைகளாக மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி உள்ளார்.

கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் இந்த முறையும் பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles