கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஜசெக சார்பில் பெண் வேட்பாளரா?

செ.வே. முத்தமிழ் மன்னன்

கோலாலம்பூர் ஏப்ரல் 6-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஜசெக சார்பில் பெண் வேட்பாளர் போட்டியிடலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜசெக மகளிர் அணியைச் சேர்ந்த சிலரின் பெயர்கள் பரிசளிக்கப்பட்டு வருவதாக பிரிவின் தலைவி தியோ நீ சிங் தெரிவித்தார்.

இருப்பினும் கட்சியின் தலைமைத்துவம் யார் வேட்பாளர் என்பதை இறுதி முடிவு எடுக்கும் என்றார் அவர்.

வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது. மே 11 ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறுகிறது.

இம்முறை பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் இடையே கடுமையான போட்டி ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles