
செ வே. முத்தமிழ் மன்னன்|
சிரம்பான், ஏப்ரல் 7-
நெகிரி செம்பிலான் மக்கள் நல சேவை மலேசியா சங்கத்தின் நிதி திரட்டும் விருந்தில் கலந்து கொண்டதை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று நெகிரி மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜெ.அருள் குமார் தெரிவித்தார்.
இந்த சங்கம் கடந்த 3 ஆண்டுகளில் IPT மாணவர்கள், நோயாளிகள், வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிகள் உட்பட எட்டு லட்சம் வெள்ளிக்கு மேல் நிறைய உதவிகளைச் செய்துள்ளது.
இந்த நிதிகள் அனைத்தும் சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் மாதாந்திர பங்களிப்புகளாகும்.
இச்சங்கத்தால் கட்டமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளையானது நிதி தேவைப்படுபவர்களுக்கு வழங்கி பேருதவி செய்ய முடிகிறது.
இந்த சங்கத்தின் இந்த உன்னத முயற்சிகள் தொடரும் என நம்புவதாக அவர் சொன்னார்.
டமான்சாரா நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு சுரேஷ் சிங் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் விழாவில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

