கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தல்! மண்டிப் சிங் உட்படமூவர் பெயர் பரிசீலனை

மா. பவளச்செல்வன்
உலு சிலாங்கூர், ஏப்ரல் 7-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறும் வேளையில் பக்கத் தான் ஹராப்பான் வேட்பாளரை தேர்வு செய்வது முழு முறமாக களம் இறங்கியுள்ளது.

கடந்த மூன்று தவணைகளில் ஜசெக வேட்பாளர் லீ கீ ஹோங் அமோக வெற்றி பெற்றார்.

அவர் காலமானதை தொடர்ந்து இங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்கத்தான நேஷனல் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இங்கு போட்டியிட போகும் ஜசெக வேட்பாளர் யார் என்பது மிக விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் செயலாளர் மண்டிப் சிங் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ரவாங் கவுன்சிலர் எலிஸ் மற்றும் கோலகுபு பாரு மாவட்ட கவுன்சிலர் சரிபா பக்கார் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

மண்ணின் மைந்தர் என்று வர்ணிக்கப்படும் மண்டிப் சிங் கடந்த தேர்தலில் இங்கு போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி சில மணி நேரத்தில் அவருக்கு வாய்ப்பு கிட்டவில்லை.

இம்முறை அவர் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று ஜசெக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles