
(காளிதாஸ் சுப்ரமணியம்)
கோலாலம்பூர் ஏப்ரல் -7
ம.இ.கா. தேசிய இளைஞர் பிரிவு தலைவர் பதவிக்கு போட்டியிடும் அர்விந்த் கிருஷ்ணன் அவர்களுக்கு மலாக்கா மஸ்ஜித் தானா இளைஞர் அணி முழு ஆதரவு வழங்குவதாக அதன் தலைவர் குகன் ராம் தெரிவித்தார்.
அதேசமயம் இளைஞர் அணி துணை தலைவர் பதவிக்கு போட்டியிடும் கேசவனுக்கும் முழு ஆதரவு வழங்குவதாக அவர் சொன்னார்.
நமது ஒற்றுமையே நம் பலம் என்பதை ம.இ.காவின் தலைமையில் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் டத்தோஶ்ரீ சரவணன் உணர்த்தியுள்ளனர்.
ம இகா இளைஞர் அணி மீண்டும் துடிப்புடன் செயல்பட வேண்டும். அதற்கு அரவிந்த் மற்றும் கேசவன் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
அந்த வகையில் நீண்டகாலமாக ம.இ.கா இளைஞர் பிரிவில் சேவையாற்றி வரும் அரவிந்த் மற்றும் கேசவன் வெற்றி பெற முழு ஆதரவு வழங்குவதாக குகன் ராம் தெரிவித்தார்.
நாடு தழுவிய அளவில் மஇகா இளைஞர் அணி மாற்றத்தை விரும்புகிறார்கள்.
அந்த வகையில் இளைஞர் அணியை வழிநடத்தக்கூடிய அனைத்து தகுதிகளையும் இவர்கள் பெற்றிருப்பதால் நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம் என்று அவர் சொன்னார்.

