மலேசிய இந்திய சமுதாயத்தின் பொருளாதார உருமாற்ற திட்டம்! டத்தோ இரமணன் தீவிர முயற்சி

(காளிதாஸ் சுப்ரமணியம்)

கோலாலம்பூர் ஏப்ரல் 7-
மலேசிய அமைச்சரவையில் தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை துணை அமைச்ராக பதவி ஏற்று டத்தோ ஆர். இரமணன் சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார்.

இதன் வழி இந்தியத் தொழில்முனைவோர்களை அடுத்தகட்ட உயர்வுக்கு அழைத்துச் செல்லும் நகர்வுகளை முன்னெடுத்து அயராது உழைத்து வருகிறார்.

30 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த தெக்குன் நேஷனல் ஸ்பூமி வர்த்தக கடனுதவித் நிதி ஒதுக்கீட்டை 60 லட்சம் ரிங்கிட்டாக உயர்வுக்கு வழி வகுத்துள்ளார்.

இந்நிலையில் மலேசிய இந்திய பெண்களும் விடுபட்டு விடக்கூடாது என்ற உன்னத நோக்கத்தில் பெண் தொழில் முனைவோருக்கான புதிய பொருளாதார உருமாற்றத் திட்டங்களைக் கொண்டு வருவதிலும் அதற்குரிய நிதி வளங்களை உருவாக்குவதிலும் டத்தோ இரமணன் தீவிரமாகக் களம் இறங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles