
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர், ஏப் 7- அடுத்த மாதம் 11ஆம் தேதி நடைபெற உள்ள கோல குபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் இறுதி செய்ய பக்காத்தான் ஹராப்பான் தலைமை இன்று கூடுகிறது.
நேற்று ஷா ஆலமில் நடைபெற்ற ஹராப்பான் கூட்டத்தின் போது மகளிர் பிரிவு பிரதிநிதிகள் உட்பட பல பெயர்கள் பரிசீலனைக்கு முன்மொழியப்பட்டதாக ஜசெக தேசிய துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக விரைவில் வேட்பாளரை யார் என்பது முடிவு எடுக்கப்படும் என நம்புகிறோம்
எனினும், இப்போதைக்கு அது விவாத நிலையில் மட்டுமே உள்ளது. இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று டிஜிட்டல் துறை அமைச்சருமான அவர் சொன்னார்.
இந்த இடைத் தேர்தலில் எந்தக் கட்சி போட்டியிடுவது என்பது உறுதியாகிவிட்டது.
அது ஹராப்பான்-பெர்பாடுவானை பிரதிநிதிக்கும் ஜசெகவின் வேட்பாளர் என்று சிலாங்கூர் மாநில ஜசெக தலைவருமான அவர் சொன்னார்.

