அரவிந்த் – கேசவனுக்கு செலாயாங் ம.இ.கா. இளைஞர் அணி மகாத்தான ஆதரவு!

(காளிதாஸ் சுப்ரமணியம்)

கோலாலம்பூர் ஏப்ரல் 7-
மஇகா இளைஞர் அணி தேர்தல் களைக்கட்டது தொடங்கி இருக்கும் வேளையில் 2024-2027 தவனைக்கான ம.இ.கா. தேசிய இளைஞர் பிரிவு தலைவர் பதவிக்கு அரவிந்த் மற்றும் துணை தலைவர் பதவிக்கு கேசவன் போட்டியிடுகிறார்கள்.

துடிப்பு மிக்க இளைஞர் தலைவர்களாக விளங்கி கொண்டிருக்கும் அரவிந்த் மற்றும் கேசவனுக்கு செலாயாங் தொகுதி ம.இ.கா. இளைஞர் அணி பிளவுபடாத ஆதரவை வழங்குவதாக தொகுதி இளைஞர் அணி தலைவர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மலேசிய இந்திய இளைஞர்களின் நம்பிக்கை குரலாக இவர்கள் விளங்குவதால் முழு ஆதரவை தருகிறோம் என்று செலாயாங் ம.இ.கா. இளைஞர் அணி அறிவித்துள்ளது.

ம.இ.கா. இளைஞர் அணியை சிறந்த முறையில் வழிநடத்த இவர்களின் தலைமைத்துவம் தேவைபடுவதால் அனைத்து தொகுதிகளும் முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று பிரசாத் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles